TNPSC Thervupettagam

திரிகோணமலை எண்ணெய்க் கிடங்கு

January 5 , 2022 1236 days 558 0
  • திரிகோணமலை எண்ணெய்க் கிடங்கு கூட்டு வளர்ச்சிப் பணியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான லங்கா IOC என்ற நிறுவனத்திற்கு 49% (Indian oil corporation) பங்கும் சிலோன் பெட்ரோலியக் கழகத்திற்கு 51% பங்கும் வழங்கப்படும் என சமீபத்தில் இலங்கை அரசு அறிவித்தது.
  • திட்டமிட்டபடி இவ்வாறு நடைபெற்றால் 1987 ஆம் ஆண்டு ஜூலை 29 அன்று கையெழுத்தான இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின் இணைப்பின் ஒரு பகுதியாக உள்ள முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை குடியரசுத் தலைவர் ஜெ.ஆர். ஜெயவர்த்தனே ஆகியோர் இடையே மேற்கொள்ளப்பட்ட கடிதப் பரிமாற்றத்தில் இடம் பெற்றுள்ள உடன்படிக்கையை அமல்படுத்துவதில் இந்தியாவும் இலங்கையும் இறுதியாக வெற்றியடையும்.
  • திரிகோணமலை என்பது சென்னைக்கு அருகிலுள்ள துறைமுகம் ஆகும்.

இந்திய – இலங்கை ஒப்பந்தம்

  • இது பிரபலமாக ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் எனக் குறிப்பிடப்படுகிறது.
  • இது 1987 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் (தமிழர்கள் மற்றும் சிங்கள சமுதாயத்தினரிடையே) காரணமாக கையெழுத்தானது.
  • இந்த ஒப்பந்தமானது இந்தியாவின் உத்திசார் நலன்கள், இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள்நலன் மற்றும் இலங்கையிலுள்ள தமிழ் சிறுபான்மையினர் உரிமைகள் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்த விழைகிறது.
  • இலங்கையின் உள்நாட்டுப் போரைச் சமாளிக்க இலங்கையில் இந்தியாவின் அமைதி காப்புப் படையினரை நிலை நிறுத்தவும் இந்த ஒப்பந்தம் வழிவகுத்தது.
  • மேலும் இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் 13வது திருத்தம் கொண்டு வரவும், 1987 ஆம் ஆண்டு மாகாண சபைச் சட்டம் உருவாகவும் இது வழி வகுத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்