TNPSC Thervupettagam

திரிபுரா போராளிகள் அமைப்பை தடைசெய்ய தீர்ப்பாயம் முடிவு

November 22 , 2018 2450 days 685 0
  • திரிபுராவில் உள்ள 2 போராளிகள் அமைப்பைத் தடை செய்வது குறித்து முடிவு செய்வதற்காக டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் கைட்-இன் தலைமையில் ஒரு தீர்ப்பாயத்தினை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.
  • இது சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
  • பின்வரும் 2 அமைப்புகள் அந்த தீவிரவாதக் குழுக்கள் ஆகும்
    • திரிபுராவின் தேசிய விடுதலை முன்னணி (NLFT)
    • அனைத்து திரிபுரா புலி படை(ATTF)
  • திரிபுராவின் அந்த 2 போராளிகள் அமைப்புகளுக்கு அக்டோபர் 2018-ல் அவர்களின் வன்முறை மற்றும் அரசுக்கெதிரான நடவடிக்கைகள் காரணமாக 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசால் புதிய தடை விதிக்கப்பட்டது.
  • இந்தக் கிளர்ச்சியாளர்கள் குழுவானது ‘1956 ஆம் ஆண்டுக்குப் பிறகு மாநிலத்திற்குள் வந்த வெளிநாட்டவர்களை வெளியேற்ற வேண்டும்’ என்ற குறிக்கோளுடன் உருவாக்கப்பட்டன. இவை முதன்முதலில் 1997-ல் தடை செய்யப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்