திரிபுரா, மணிப்பூர் மற்றும் மேகாலயா மாநில உருவாக்க தினம் - ஜனவரி 21
January 24 , 2026 248 days 269 0
திரிபுரா, மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகியவை 54 ஆண்டு கால மாநில அந்தஸ்தை நிறைவு செய்வதுடன் ஜனவரி 21, 2026 அன்று தங்கள் உருவாக்கத் தினத்தைக் கொண்டாடுகின்றன.
இந்த மூன்று மாநிலங்களும் 1971 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதியன்று வடகிழக்கு பகுதிகள் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் முழு அளவிலான மாநிலங்களாக மாறின.
மாநிலமாக மாறுவதற்கு முன்பு, திரிபுரா மற்றும் மணிப்பூர் ஆகியன ஒன்றியப் பிரதேசங்களாக இருந்தன என்பதோடுமேலும் மேகாலயா அசாமின் ஒரு பகுதியாக இருந்தது.
இந்தச் சட்டம் வடகிழக்குப் பிராந்தியத்தை நிர்வாகச் சுயாட்சி மற்றும் சட்டமன்ற அதிகாரங்களை வழங்குவதற்காக மறுசீரமைத்தது.
சுயாட்சி, கலாச்சார அடையாளம் மற்றும் பிராந்திய வளர்ச்சியில் மாநிலங்களின் பயணத்தை இந்த உருவாக்க நிறுவன தினம் குறிக்கிறது.