TNPSC Thervupettagam

திரிஷ்னா எரிவாயுத் திட்டம்

January 15 , 2019 2393 days 726 0
  • தேசிய வனவுயிர் மன்றமானது ஒஎன்ஜிசி நிறுவனத்தின் திரிஷ்னா எரிவாயுத் திட்டத்திற்கான தனது அனுமதியை வழங்கி இருக்கின்றது.
  • அரசுக்குச் சொந்தமான ஒஎன்ஜிசியின் திரிபுரா மாநிலப் பிரிவு கோமதி மாவட்டத்தில் பெலோனியா துணைப் பகுதியில் உள்ள திரிஷ்னா வனவிலங்கு சரணாலயத்திலிருந்து கூடிய விரைவில் இயற்கை எரிவாயுவைத் தோண்டி எடுக்கும் பணியை ஆரம்பிக்கும்.
  • மாநில வனவுயிர் மன்றத்தின் பரிந்துரைகளையடுத்து, தேசிய வனவுயிர் மன்றமானது இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கி இருக்கின்றது.
தேசிய வனவுயிர் மன்றம்
  • 1972-ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பு தேசிய வனவுயிர் மன்றமாகும்.
  • இம்மன்றம் பிரதமரால் தலைமை தாங்கப்படுகின்றது.
  • வனவுயிர் சம்பந்தமான அனைத்து விவகாரங்களை மறுபார்வையிடுவதிலும் தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களுக்கு உள்ளேயும், அருகேயும் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு அனுமதி வழங்கிடுவதிலும் இது ஒரு உச்சகட்ட அமைப்பாக பணியாற்றுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்