சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ஆனது 2021-2030 ஆம் காலக் கட்டத்திற்கான திருத்தப்பட்ட ஆவணத்தை வெளியிட்டுள்ளது.
திருத்தப்பட்ட திட்ட ஆவணத்தில், அனைத்து மறுசீரமைப்பு நடவடிக்கைகளிலிருந்தும் இந்தியா 3.39 பில்லியன் டன் கார்பன் (உறிஞ்சுப் பகுதி) பிடிப்பினை அடைய முடியும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மதிப்பிடப்பட்ட சுமார் 24.7 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் காடு மற்றும் மரங்களின் பரப்பளவை அதிகரிக்க வேண்டும்.
கூடுதல் காடு மற்றும் மரங்களின் பரவல் மூலம் 2.5 முதல் 3 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடுக்கு சமமான கூடுதல் கார்பன் பிடிப்பினை உருவாக்குவதே தேசியப் பசுமை இந்தியா திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் 2015-16 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன.
திருத்தப்பட்ட ஆவணத்தின்படி, 2020-21 ஆம் ஆண்டு வரையில் சுமார் 11.22 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு மரம் வளர்ப்பு பகுதியின் கீழ் சேர்க்கப் பட்டது.
சதுப்புநிலங்கள் மற்றும் இந்திய இமயமலைப் பகுதியுடன் சேர்ந்து, ஆரவல்லி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்கள் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலப் பரப்புகளை மீட்டெடுப்பதில் அமைச்சகம் கவனம் செலுத்தும்.