பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது, (CCEA) திருத்தி அமைக்கப்பட்ட SHAKTI கொள்கையின் கீழ் ஒரு முன்மொழிதலை அங்கீகரித்துள்ளது.
மத்திய துறை மற்றும் மாநிலத் துறையைச் சேர்ந்த அனல் மின் நிலையங்கள் மற்றும் சுயாதீன மின் உற்பத்தி நிறுவனங்கள் (IPPs) ஆகியவற்றிற்கு அதிக அளவு நிலக்கரி கிடைக்கச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிலக்கரி விநியோகம் போதுமானதாக இல்லாத நெருக்கடியில் உள்ள மின் உற்பத்தி அலகுகளுக்கு நிலக்கரியை வழங்குவதற்காக 2018 ஆம் ஆண்டில் SHAKTI கொள்கை தொடங்கப்பட்டது.
SHAKTI என்பது 'Scheme for Harnessing Scheme for Harnessing and Allocating Koyala Transparently in India - இந்தியாவில் நிலக்கரியினை (கோயாலா) மிக வெளிப்படையான முறையில் பயன்படுத்துவதற்கும் ஒதுக்குவதற்குமான திட்டம்' என்பதைக் குறிக்கிறது.