திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத் திருத்தம்
March 16 , 2026 14 hrs 0 min 64 0
திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது.
இந்தத் திருத்தம் "திருநங்கை" என்பதற்கான புதிய வரையறையை முன்மொழிகிறது மற்றும் சுய-அடையாளம் காணப்பட்ட பாலின அடையாளம்" என்ற விதியை நீக்குகிறது.
2019 ஆம் ஆண்டு சட்டமானது, பிறப்பின் போதான பாலினத்துடன் ஒத்துப்போகாத நபர்கள், மருத்துவ நடைமுறைகள் ஏதுமின்றி தங்களைத் திருநங்கைகளாக கொள்ள அனுமதித்தது.
தற்போது முன்மொழியப்பட்டுள்ள மசோதா, மருத்துவக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் திருநங்கை அடையாளச் சான்றிதழ்களை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.
திருநங்கைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு (பொது இடங்களுக்குச் செல்ல அனுமதி மறுத்தல் அல்லது கட்டாய உழைப்பு உட்பட) குறிப்பிட்ட தண்டனைகளையும் இந்தத் திருத்தம் அறிமுகப்படுத்துகிறது.