TNPSC Thervupettagam

திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு மசோதா, 2019

November 27 , 2019 1993 days 1785 0
  • 2019 ஆம் ஆண்டின் திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு மசோதாவானது 2019 ஆம் ஆண்டு ஜூலை 19 அன்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சரான தாவர்சந்த் கெலாட் என்பவரால் மக்களவையில் அறிமுகப்படுத்தப் பட்டது.
  • இது 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05 அன்று மக்களவையாலும் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று மாநிலங்களவையாலும் நிறைவேற்றப் பட்டது.

இந்த மசோதாவின் முக்கிய அம்சங்கள்

  • இந்த மசோதாவானது ஒரு நபரின் பிறப்பின் போது குறிப்பிடப்பட்ட பாலினமானது தற்பொழுது உள்ள அவரது பாலினத்துடன் பொருந்தவில்லை எனில் அந்த நபரை ஒரு திருநங்கையாக வரையறுக்கின்றது.
  • இது திருநம்பி, திருநங்கை, இடைப்பட்ட பாலின மாறுபாடு உள்ளவர்கள், பாலின - வினோதகர்கள் மற்றும் சமூக - கலாச்சார அடையாளங்களைக் கொண்ட நபர்கள் (எ.கா: ஹிஜ்ரா) ஆகியோரை உள்ளடக்கியுள்ளது.
  • இவர்கள் தங்களுடைய வீடுகளில் வசிப்பதற்கான உரிமையையும் சேர்த்துக் கொள்ளப் படுவதற்கான உரிமையையும் பெற்றுள்ளனர்.
  • பணியாளர் நியமனம் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட வேலைவாய்ப்பு விவகாரங்களில் ஒரு திருநங்கைக்கு எதிராக எந்தவொரு அரசாங்கமோ தனியார் நிறுவனமோ பாகுபாடு காட்ட முடியாது.
  • திருநங்கை ஒருவர் தனது பாலினத்தை ‘திருநங்கை’ என்று குறிப்பிடுவதற்கான அடையாளச் சான்றிதழுக்காக மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம் செய்யலாம்.

தேசிய திருநங்கைகள் ஆணையம்

  • மத்திய சமூக நீதித் துறை அமைச்சரின் தலைமையின் கீழ் தேசிய திருநங்கைகள் ஆணையம் அமைக்கப்பட இருக்கின்றது.
  • இதன் துணைத் தலைவர் – மத்திய சமூக நீதித் துறைக்கான இணையமைச்சர்.
  • உறுப்பினர்கள்:
    • செயலாளர், மத்திய சமூக நீதித் துறை அமைச்சகம்.
    • மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆகியவற்றைச் சேர்ந்த தலா ஒரு பிரதிநிதி.
    • நிதி ஆயோக் மற்றும் மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்கள்.
    • திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களைச் சேர்ந்த 5 வல்லுநர்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்