அசாம் மாநிலத்தில் திருநர் சமூகத்திற்கு இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) அந்தஸ்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது கல்வி, வேலைவாய்ப்புகள் மற்றும் நலத்திட்டங்களுக்கான அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் கூடுதலாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் மேற் பார்வையாளர்-நிலை போன்ற பதவிகளில் சுமார் 50% என்ற அளவானது அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஒதுக்கப் படும்.
இந்த மேற்பார்வையாளர் பணி நிலைகள் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகள் (ICDS) திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதோடு தற்போதைய அடிமட்ட நிலை பதவிகளில் இருந்து வரும் நபர்களுக்குப் பதவி உயர்வு வழங்குகின்றன.