TNPSC Thervupettagam

திருமண உறவிற்குள்ளான பாலியல் வன்கொடுமை குறித்த தனிநபர் மசோதா 2025

December 21 , 2025 3 days 57 0
  • காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர் சமீபத்தில் குற்றவியல் சட்டத்தில் திருமண உறவிற்குள்ளான பாலியல் வன்கொடுமைக்கு உள்ள விதிவிலக்கை நீக்குவதற்காக மக்களவையில் ஒரு தனி நபர் உறுப்பினர் மசோதாவை அறிமுகப் படுத்தியுள்ளார்.
  • அவர் பாராளுமன்றத்தின் கீழவையில் இரண்டு தனி நபர் உறுப்பினர் மசோதாக்களையும் அறிமுகப் படுத்தினார்.
    • 2020 ஆம் ஆண்டு தொழில் துறை பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் குறியீட்டினைத் திருத்துதல் மற்றும்
    • மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களை மறுசீரமைப்பதற்காக மத்திய அரசுக்குப் பரிந்துரைக்க ஒரு மாநில மற்றும் ஒன்றியப் பிரதேச மறுசீரமைப்பு ஆணையத்தை நிறுவுதல்.
  • ஒரு தனி நபர் உறுப்பினர் மசோதா என்பது அமைச்சராக இல்லாத ஓர் உறுப்பினர் (பாராளுமன்ற உறுப்பினர்) பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும் ஒரு சட்ட முன் மொழிவாகும்.
  • 14 தனி நபர் உறுப்பினர் மசோதாக்கள் மட்டுமே சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளன, என்ற நிலையில்  1970 ஆம் ஆண்டிலிருந்து இரு அவைகளாலும் தனி நபர் மசோதா எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
  • பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 63, 2023 (IPC பிரிவு 375) - மனைவி 18 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், திருமணப் பாலியல் வன்கொடுமை என்பது தண்டனைச் சட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட குற்றமாக கருதப்படாது.
  • குடும்ப வன்முறையிலிருந்துப் பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் (2005) - திருமணப் பாலியல் வன்கொடுமை என்பது குடும்ப வன்முறையின் ஒரு வடிவமாகக் கருதப் படுகிறது என்பதோடு திருமணமற்றப் பாலியல் வன்கொடுமையை விட இலகுவான தண்டனையை அது பரிந்துரைக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்