திருச்சியில் உள்ள தேசியத் தொழில்நுட்ப நிறுவனமானது “திருமதிகார்ட்” என்ற பெயர் கொண்ட சுய உதவிக் குழுக்களால் (SHG - Self Help Group) தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கான கைபேசிச் செயலியை உருவாக்கியுள்ளது.
இந்தச் செயலியானது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து உருவாக்கப் பட்டுள்ளது.
இந்தச் செயலியானது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதையும் சந்தை வாய்ப்புகளை அவர்கள் (பெண்கள்) தடையின்றி அணுக உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.