TNPSC Thervupettagam

திருவலஞ்சுழியில் சோழர் கால கல் பலகணி/சன்னல்

July 11 , 2026 3 days 59 0
  • தமிழ்நாட்டின் திருவலஞ்சுழியில் உள்ள நுரைப் பிள்ளையார் சன்னதியில் உள்ள கல் பலகணி/சன்னல், பிற்காலச் சோழர் காலத்தின் அபாரமான கைவினைத்திறனை எடுத்துக் காட்டுகிறது.
  • இந்தப் பலகணி/சன்னலானது, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சடைமுடி நாதர் கோயில் வளாகத்திற்குள் அமைந்துள்ளது.
  • இந்தப் பலகணி நான்கு கல்தூண்கள், சிக்கலான பின்னல் வேலைப்பாடுகள், மலர் வடிவமைப்பு மற்றும் யாழிகளின் (புராணங்களில் வரும் சிங்கம் போன்ற உயிரினங்கள்) சிற்பங்களைக் கொண்டுள்ளது.
  • இதில் உள்ள இரண்டு மையத் தூண்கள் ஒற்றைக் கல்லால் செதுக்கப்பட்டுள்ளன. இது சோழ கைவினைஞர்களின் மேம்பட்ட கல் செதுக்கும் திறனைக் காட்டுகிறது.
  • இந்த சன்னதியில் சுமார் 50 கல்வெட்டுகள் உள்ளன என்ற நிலையில் அவற்றில் பழமையானது மூன்றாம் குலோத்துங்கன் காலத்தைச் சேர்ந்ததாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்