TNPSC Thervupettagam

திருவள்ளூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிரிடல் சோதனை

May 2 , 2025 19 days 79 0
  • திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மக்காச்சோள விவசாயிகள் இந்த ஆண்டு சோதனை அடிப்படையில் 50 ஏக்கருக்கு மேலான பரப்பில் மக்காச் சோளப் பயிரை அறுவடை செய்துள்ளனர்.
  • R.K. பேட்டை, திருத்தணி, திருவலங்காடு மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய நான்கு தொகுதிகளைச் சேர்ந்த சுமார் ஐம்பது விவசாயிகள் இந்தப் பகுதியில் புதியப் பயிரை வளர்ப்பதற்கான பரிசோதனையில் பங்கேற்றனர்.
  • தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திலிருந்து விவசாயிகளுக்கு MH6 என்ற வகை விதைகள் வழங்கப்பட்டன.
  • விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை, ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள எத்தனால் தயாரிக்கும் தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்கின்றனர்.
  • இந்திய அரசானது, மக்காச்சோளத்திற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவித்து உள்ளதால், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்