அனைத்து இந்திய தொழில்நுட்பக் கல்வி ஆணையம் (AICTE - All India Council for Technical Education) புனேவில் உள்ள இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (Film and Television Institute of India - FTII) 5 படிப்புகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தப் படிப்புகளானது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள “செயல்முறைக் கலைகள் மற்றும் கைத்தொழில்” என்ற பிரிவின் கீழ் AICTE-யினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இயக்கம், மின்னணு திரைப்படவியல், காணொளித் தொகுப்பு மற்றும் ஒலிப்பதிவு & தொலைக்காட்சிப் பொறியியல் ஆகியவை தொலைக்காட்சிப் பிரிவில் உள்ள 4 படிப்புகளாகும்.
திரைப்படத் திரைக்கதை வசனம் எழுதுதல் என்ற ஒரு படிப்பானது திரைப்படம் என்ற பிரிவில் உள்ளது.
FTII ஆனது AICTE-யினால் அங்கீகரிக்கப்பட்ட தனித்துவம் வாய்ந்த ஒரே திரைப்பட நிறுவனமாகும்.
புனே நகரில் உள்ள FTII ஆனது 1960 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
இது இந்திய அரசின் மத்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தனிச் சுதந்திர நிறுவனமாகும்.