திறந்த வெளியில் மலம் கழிக்காத மாவட்டங்கள் – நாகாலாந்து
January 29 , 2018 2728 days 1058 0
நாகாலாந்தில் உள்ள நான்கு மாவட்டங்கள் திறந்த வெளியில் மலம் கழிக்காத மாவட்டங்கள் என்று தூய்மை இந்தியா (கிராமின்) இயக்கத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை – மோகோக்சங் (Mokokchung), ஜீன்ஹேபோடோ (Zunheboto), கிபைர் (Kiphire) மற்றும் லோன்லாங் (Longleng).
மோகேக்சங் மாவட்டத்தில் உள்ள உங்மா (Ungma) கிராமம் பெரும்பாலும் அவோ (Ao) பழங்குடியினர் குடியிருக்கும் பகுதியாகும். தூய்மையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையினைத் தேர்ந்தெடுத்திருக்கும் கிராமங்களில் இதுவும் ஒன்றாகும்.
இத்திட்டத்தினை நாகாலாந்தில் நடைமுறைப்படுத்தும் முகமை நிறுவனம் பொது சுகாதார பொறியியல் துறை (Public Health Engineering Department - PHED) ஆகும்.