திறந்தவெளி மலம் கழித்தலற்ற மாநிலம் – அருணாச்சலப் பிரதேசம்
January 1 , 2018 2810 days 1069 0
சிக்கிமிற்கு அடுத்து வடகிழக்கு இந்தியாவில் திறந்தவெளி மலம் கழித்தலற்ற மாநிலம் (ODF- Open Defecation Free) என்ற தகுதியை பெறும் இரண்டாவது மாநிலமாக அருணாச்சலப் பிரதேச மாநிலம் உருவாகியுள்ளது.
மாநில அரசின் கூடுதல் ஊக்கத் தொகையாக ஒரு கழிவறைக்கு 8000 ரூபாய் என்று வழங்கப்பட்டதோடு சேர்த்து சுவச் பாரத் திட்டம் (கிராமின்) என்ற திட்டத்தின் கீழ் இந்த முயற்சி முழுவதுமாக மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மாநில அரசு அக்டோபர் 2ம் தேதியன்று தவாங் என்ற இடத்தில் சுவச் பாரத் (கிராமின்) திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் சொத்துக்களின் நீடித்தத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டு சுவச் அருணாச்சலம் என்ற திட்டத்தை ஆரம்பித்தது.