திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத கிராமம் பிளஸ் அந்தஸ்து
May 18 , 2023 802 days 437 0
ஸ்வச் பாரத் மிஷன் கிராமின் (SBM-G) திட்டத்தினுடைய இரண்டாம் கட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள பாதி எண்ணிக்கையிலான கிராமங்கள் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத கிராமம் பிளஸ் என்ற அந்தஸ்தினைப் பெற்றுள்ளன.
2.96 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்கள் தங்களைத் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத கிராமம் பிளஸ் என்று அறிவித்துள்ளன.
இது 2024-25 ஆம் ஆண்டிற்குள் நாட்டினுடைய SBM-G திட்டத்தின் இரண்டாம் கட்ட இலக்குகளை அடைவதற்கான பாதையில் இட்டுச் சென்றுள்ளது.
ஒரு ODF பிளஸ் அந்தஸ்து பெற்ற கிராமம் ஆனது திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத (ODF) அந்தஸ்தினைப் பேணுவது மட்டுமல்லாமல் திடக் கழிவு அல்லது திரவக் கழிவு மேலாண்மை அமைப்புகளையும் செயல்படுத்துகிறது.
தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இத்திட்டத்தில் சிறப்பான செயல்பாட்டைக் கொண்டுள்ள மாநிலங்களாகும்.
இதன் சிறிய மாநிலங்களின் பிரிவில் கோவா மற்றும் சிக்கிம் ஆகியவை முன்னணியில் உள்ளன.
அனைத்து ஒன்றியப் பிரதேசங்களான அந்தமான் & நிக்கோபார் தீவுகள், தாத்ரா நகர் ஹவேலி & டாமன் டையூ மற்றும் லட்சத்தீவுகள் ஆகியவை முழு அளவிலான ODF பிளஸ் அந்தஸ்தினைக் கொண்ட மாதிரி கிராமங்களைக் கொண்டுள்ளன.