திறனுள்ள போக்குவரத்துக் கட்டுப்பாடு – சண்டிகர்
August 8 , 2019
2106 days
706
- நாட்டின் இதே வகையைச் சேர்ந்த ஒரு முதலாவது முன்னெடுப்பான, சண்டிகர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட முப்பரிமாண திறன் வாய்ந்த போக்குவரத்துச் சமிக்ஞையை மொஹாலி போக்குவரத்துக் காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
- போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று சாலைகளின் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள போக்குவரத்து சமிக்ஞை கடிகைகளின் திறனற்றச் செயல்பாடாகும்.
- “இன்டெலைட்ஸ்” என்று அழைக்கப்படும் இந்தக் கம்பியில்லா அமைப்பு சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை விளக்குகளின் நேரங்களை மாற்றியமைப்பதற்கு இயங்குநிலை சமிக்ஞை கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றது.
- சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ற படி சமிக்ஞை நேரங்கள் மாற்றியமைக்கப் படுகின்றன.
- இது நிகழ்நேரப் போக்குவரத்து நெரிசல் குறித்தத் தகவலைச் சேகரிப்பதற்காக சிசிடிவி கேமராக்களைப் பயன்படுத்துகின்றது.
Post Views:
706