TNPSC Thervupettagam

திறன் திட்டம் 2025

July 27 , 2025 18 days 91 0
  • தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களிடையே உள்ள கற்றல் இடைவெளிகளைக் குறைக்க, திறன் முன்னெடுப்பை (சீரமைப்பு மற்றும் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான இலக்கு சார் உதவி) தொடங்கியுள்ளது.
  • இந்தத் திட்டம் ஆங்கிலம், தமிழ் மற்றும் கணிதப் பாடங்களில் மாணவர்களின் தேர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது அரசுப் பள்ளிகளில் பள்ளி நேரங்களில் செயல்படுத்தப்படும்.
  • இந்த முன்னெடுப்பானது ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் சுமார் 13 லட்சம் மாணவர்களுக்குப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக, நகை தயாரித்தல் மற்றும் தையல் போன்ற தொழில் திறன்கள் ஆனது இதற்குரிய சமூகப் பங்களிப்பு ஆதரவுடன் வயது வந்தோர் எழுத்தறிவு மையங்கள் மூலம் வழங்கப்படும்.
  • அரசு உயர்நிலைப் பள்ளிகளில் மொத்தமாக 12,000 தொழிற்கல்வி பயிலும்  மாணவர்களுக்கு 13 கோடி ரூபாய் செலவில் அரசு தொழிற்துறைப் பயிற்சி நிறுவனங்கள் (ITI) மற்றும் மாநில திறன் மையம் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.
  • மாணவர்களிடையே வாசிப்புத் திறனை மேம்படுத்த வாசிப்புச் சவால்கள் மற்றும் கதை சொல்லும் திறன் அமர்வுகள் போன்ற முன்னெடுப்புகள் நடத்தப்படும்.
  • கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கென கலைச் சிற்பி என்ற பெயரில் கோடைக்கால முகாம் ஏற்பாடு செய்யப்படும்.
  • இசைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வித்துறை நடத்தும் மொழித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவுடன் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ்கள் வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்