ஊடக மற்றும் பொழுதுபோக்குத் துறைக்காக 9 நகரங்களில் 14 அங்கீகரிக்கப்பட்ட உலகத் திறன் இந்தியப் பயிற்சி மையங்கள் (AWSITC - Authorized World Skills India Training Centres) அமைக்கப்படும் என்று மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் திறன் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் நகரங்கள் பின்வருமாறு: சண்டிகர், சென்னை, டெல்லி, ஹைதராபாத், இந்தூர், மும்பை, புனே, ஷில்லாங் மற்றும் திருவனந்தபுரம்.
இந்த ஆண்டு ரஷ்யாவின் கசானில் நடைபெற்ற ஈராண்டிற்கு ஒரு முறையான உலகத் திறன் போட்டியில் இந்தியாவின் செயல்திறன் மிகச் சிறந்த ஒன்று ஆகும்.
48 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய அணியானது ஒரு தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலப் பதக்கங்களைத் தவிர 15 சிறப்புப் பதக்கங்களையும் வென்று இப்போட்டியில் சிறப்புத்துவம் பெற்று விளங்கியது.