திறன்பேசிகள் மற்றும் வரைப்பட்டிகைகளுக்கான 'பழுதுபார்ப்புத் தன்மை குறியீடு'
May 9 , 2025 34 days 94 0
கைபேசி மற்றும் மின்னணுப் பொருட்கள் உற்பத்தித் துறையில் பழுதுபார்ப்புத் தன்மை குறியீடு (RI) சார் கட்டமைப்பிற்காக என அமைக்கப்பட்ட குழுவானது அதன் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
அசல் உபகரண உற்பத்தியாளர்கள் (OEM) கூடுதல் இணக்க நெருக்கடிகள் இல்லாமல் கட்டமைப்பில் வழங்கப்பட்ட தரநிலை மதிப்பெண் அளவுருக்களின் அடிப்படையில் பழுதுபார்ப்புத்தன்மைக் குறியீடு குறித்த சுயச் சான்றினை வழங்க வேண்டும்.
இனி பழுதுபார்ப்புத் தன்மை குறியீடு ஆனது விற்பனை செய்யும் / வாங்கும் இடத்தில், இணைய வழி வணிக தளங்களில் மற்றும் தொகுக்கப்பட்டத் தயாரிப்புகளில் QR குறியீடு வடிவத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.
இந்தக் குறியீடானது, நுகர்வோர் 'தேவையற்ற நுகர்விற்குப்' பதிலாக தங்களுக்கானத் தயாரிப்புகளை 'கவனத்துடன் பயன்படுத்துதல்' என்ற ஒரு நெறிமுறையுடன் ஒன்றும் விருப்பத் தேர்வுகளைத் தேர்வு செய்ய உதவுகிறது.