இந்தூர் நகரம் முழுவதுமாக டிஜிட்டல் முகவரியிடல் முறையைச் செயல்படுத்தி அப்பகுதி ஒரு வரலாற்றை உருவாக்க உள்ளது.
இதன் மூலம் இது போன்று நடவடிக்கை மேற்கொண்ட இந்தியாவின் முதல் நகரமாக இது திகழ்கிறது.
படா நேவிகேஷன்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான போது திறன்மிகு நகரங்கள் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படத் தொடங்கின.
படா நிறுவனமானது காப்புரிமை பெற்ற ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கச் செய்து, நாட்டிற்கான ஒரு டிஜிட்டல் முகவரியிடல் அமைப்பினை உருவாக்கச் செய்வதற்காக வேண்டி இஸ்ரோவுடன் இணைந்து செயல்படுகிறது.