தில்லி காவல் துறையானது இந்திய சூரிய ஒளி சக்திக் கழகத்துடன் (SECI - Solar Energy Corporation of India) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
இது தில்லி நகரத்திலுள்ள காவல்துறைக் கட்டிடங்களில் 200ற்கும் மேற்பட்ட மேற்கூரை சூரிய ஒளி சக்தி அமைப்புகளை அமைக்கவிருக்கின்றது.
SECI
SECI என்பது மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகத்தின் கீழுள்ள ஒரு நிறுவனமாகும்.
இது 2011 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இது தேசிய சூரிய ஒளித் திட்டத்தைச் செயல்படுத்துதலுக்கான அரசின் தலைமை நிறுவனமாகும்.
இது சூரிய ஒளித் துறைக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரே மத்திய பொதுத் துறை நிறுவனமாகும்.