ஹரியானா மாநில அரசானது, 2025 ஆம் ஆண்டு தீன் தயாள் லடோ லட்சுமி யோஜனா திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டத்தின் கீழ் நேரடி வங்கிப் பரிமாற்றம் மூலம் தகுதியான பெண்களுக்கு மாதத்திற்கு 2,100 ரூபாய் வழங்கப்படும்.
பெண்கள் அதிகாரப்பூர்வ லடோ லட்சுமி யோஜனா கைபேசி செயலியைப் பயன்படுத்தி இயங்கலையில் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தின் பலனைப் பெறுவதற்கான தகுதியாக 23 முதல் 60 வயதுடைய பெண்கள், குடும்ப வருமானம் 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவாகவும், குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் ஹரியானாவில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப் பட்டுள்ளது.