சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகமானது அசாமின் குவஹாத்தியின் தென்மேற்கு முனையிலுள்ள தீபார் பீல் என்ற வனவிலங்குச் சரணாலயத்தின் சுற்றுச்சூழல் தாங்கு மண்டலத்தினை அறிவித்துள்ளது.
தீபார் பீல் என்பது அசாமிலுள்ள மிகப்பெரிய நன்னீர் ஏரிகளுள் ஒன்றாகும்.
இது ஒரு முக்கியப் பறவை வாழிடமாக இருப்பதைத் தவிர அந்த மாநிலத்தின் ஒரே ராம்சார் தளமாகவும் உள்ளது.
குறிப்பு
சுற்றுச்சூழல் தாங்கு மண்டலங்கள் (அ) சுற்றுச்சூழல் ரீதியாக பாதிப்படையக் கூடிய பகுதிகள் என்பவை பாதுகாக்கப்பட்டப் பகுதிகள், தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்குச் சரணாலயங்கள் போன்றவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகத்தினால் அறிவிக்கப் படும் பகுதிகளாகும்.
ஆனால் 1986 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தில் “சுற்றுச்சூழல் தாங்கு மண்டலங்கள்” என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.