தீயணைப்புப் பணிகள் பாதுகாப்பு வாரம் 2026 - மே 4 முதல் மே 10 வரை
May 9 , 2026 28 days 86 0
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் தீயணைப்பு பணிகள் பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மே 4 முதல் மே 10 ஆம் தேதி வரை தீயணைப்பு பணிகள் பாதுகாப்பு வாரம் 2026-ஐத் தொடங்கியது.
சுகாதார வசதிகளில் தீயணைப்பு மற்றும் உயிர்ப் பாதுகாப்பு குறித்த புதிய தேசிய வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டது.
இந்த வழிகாட்டுதல்கள் இடர் மதிப்பீடு, அவசரகால செயல்பாட்டு அமைப்புகள், தீயை எதிர்க்கும் உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர் பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.
தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (ICU), பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (NICU), குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (PICU) மற்றும் அறுவை சிகிச்சை அரங்குகள் (OT) ஆகியவற்றுக்குச் சிறப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
2026 ஆம் ஆண்டு தீ தடுப்புப் பாதுகாப்பு வாரத்தின் கருத்துரு "Safe Schools, Safe Hospitals, and a Fire-Safety Aware Society: Together for Fire Prevention" என்பதாகும்.