தீவனம் சார்ந்த நடவடிக்கைகளுக்கான உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள்
November 16 , 2022 1013 days 424 0
மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகமானது, 2020 ஆம் ஆண்டில் தீவனம் சார்ந்த நடவடிக்கைகளுக்கான உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (FPOs) நிறுவுவதற்கான முன்மொழிதலை முன் வைத்தது.
இது "10,000 புதிய உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்குதல் மற்றும் ஊக்குவித்தல்" என்ற மத்திய அரசின் ஒரு திட்டத்தின் கீழ் தீவனம் சார்ந்த நடவடிக்கைகளுக்கான உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை நிறுவச் செய்வதற்கு அனுமதிக்குமாறு மத்திய வேளாண் அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்தது.
இந்தியாவில் நிலவும் தீவனப் பற்றாக்குறை நிலைமையை நிவர்த்தி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேசியப் பால்வள மேம்பாட்டு வாரியமானது இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தச் செய்வதற்கான முகமையாக நியமிக்கப்பட்டுள்ளது.
இது 2022-23 ஆம் ஆண்டில் இது போன்ற 100 தீவனம் சார்ந்த நடவடிக்கைகளுக்கான உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை நிறுவுவதை இலக்காக நிர்ணயித்துள்ளது.
தற்போது, இந்தியாவில் நிலவும் தீவனப் பற்றாக்குறையானது பசுந்தீவனத்திற்கு 12 முதல் 15 சதவீதமாகவும், உலர் தீவனத்திற்கு 25-26 சதவீதமாகவும், அடர் தீவனத்திற்கு 36 சதவீதமாகவும் உள்ளது.