கேரளா 2025 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று தீவிர வறுமையிலிருந்து விடுபட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
தீவிர வறுமை ஒழிப்புத் திட்டம் (EPEP) ஆனது 64,006 குடும்பங்களைச் சேர்ந்த 1,03,099 நபர்களைக் கண்டறிந்து ஆதரவு வழங்கியது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனிப் பயனாக்கப்பட்ட நுண் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுடன் ஒருங்கிணைக்கப்பட்டன.
கேரளாவின் மக்கள்தொகையில் 0.55 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் தற்போது தீவிர வறுமை நிலையில் வாழ்கிறார்கள் என்று நிதி ஆயோக் தெரிவித்துள்ளது என்ற நிலையில் இது இந்தியாவிலேயே மிகக் குறைவாகும்.