TNPSC Thervupettagam

தீவிரப் படுத்தப்பட்ட இந்திர தனுஷ் 2.0 திட்டம்

October 29 , 2019 2075 days 1066 0
  • மத்திய சுகாதார அமைச்சகமானது டிசம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் நாடு தழுவிய அளவிலான ஒரு நோய்த் தடுப்பு இயக்கமான இந்திர தனுஷ் 2.0 என்பதனைத் தொடங்கவுள்ளது.
  • இந்தத் திட்டமானது 271 மாவட்டங்களில் இருக்கும் 70 சதவிகிதத்திற்கும் குறைவான நோய்த் தடுப்பு ஆற்றல் கொண்ட குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தற்போது 16 மாவட்டங்களில் மட்டுமே 90% அல்லது அதற்கு மேற்பட்ட வழக்கமான நோய்த் தடுப்பு மருந்துச் சேவையைக் கொண்டு இருக்கின்றது.
  • இது 2022 ஆம் ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் குறைந்தது 90% நோய்த் தடுப்பு ஆற்றலை  (தடுப்பூசி) வழங்கத் திட்டமிட்டுள்ளது.
  • 2017 ஆம் ஆண்டில், நோய்த் தடுப்பு மருந்து அளிக்கப்படாத அல்லது பகுதி நோய்த் தடுப்பு மருந்துகளைப் பெற்ற குழந்தைகளுக்கு  நோய்த் தடுப்பு மருந்துகளை அளிக்க அரசாங்கமானது தீவிரப்படுத்தப்பட்ட இந்திர தனுஷ் என்ற திட்டத்தைத் தொடங்கியது.
  • ஒரு வருடத்திற்குள், தடுப்பூசியின் மூலம் தடுக்கக் கூடிய 12 நோய்களுக்கு எதிராக சுமார் 5 மில்லியன் குழந்தைகளுக்கு நோய்த் தடுப்பு மருந்துகள் வழங்கப் பட்டுள்ளன.
  • இந்த ஆண்டு (2019) தனது வெற்றிகரமான போலியோ சொட்டு மருந்து திட்டத்தின் 25வது  ஆண்டினை இந்தியா நினைவு கூர்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்