TNPSC Thervupettagam

தீவிரவாத அமைப்புகளுக்குத் தடை

February 22 , 2023 865 days 397 0
  • மத்திய அரசானது, இரண்டு அமைப்புகளுக்குத் தடை விதிக்கச் செய்ததோடு, அந்த அமைப்புகளின் நாசகார மற்றும் இந்திய அரசிற்கு எதிரான கடும் விரோத மிக்கச் செயல்களுக்காக அந்த அமைப்பின் ஒரு நபரைத் தீவிரவாதி என்றும் அறிவித்தது.
  • அந்த இரு அமைப்புகளாவன; ஜம்மு காஷ்மீர் கஸ்னவி அமைப்பு மற்றும் காலிஸ்தான் டைகர்ஸ் அமைப்பு ஆகியவையாகும்.
  • ஜம்மு காஷ்மீர் கஸ்னவி அமைப்பானது, லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, தெஹ்ரீக்-உல்-முஜாஹிதீன், ஹர்கத்-உல்-ஜெஹாத்-இ-இஸ்லாமி மற்றும் இதர சில தடை செய்யப்பட்டப் பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து தனது பணியாளர்களைச் சேர்க்கிறது.
  • காலிஸ்தான் டைஜர்ஸ் அமைப்பானது 2011 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
  • இது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான பாபர் கால்சா இன்டெர்னேசனல் என்ற அமைப்பின் கிளை ஆகும்.
  • பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்யப் பட்டதாக அறிவிக்கப்பட்ட 43வது மற்றும் 44வது பயங்கரவாதக் குழுக்கள் முறையே ஜம்மு காஷ்மீர் கஸ்னவி அமைப்பு மற்றும் காலிஸ்தான் டைகர்ஸ் அமைப்பு ஆகியனவாகும்.
  • பஞ்சாப்பைச் சேர்ந்த ஹர்விந்தர் சிங் சந்து என்கிற ரிண்டா ஒரு தீவிரவாதியாக அறிவிக்கப் பட்டுள்ளார்.
  • அரசாங்கத்தினால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட 54வது நபர் இவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்