தீவிரவாதத்தினால், பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நினைவு மற்றும் அஞ்சலி தினம் – ஆகஸ்ட் 21
August 23 , 2021 1588 days 482 0
ஐக்கிய நாடுகளானது ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 21 ஆம் தேதியினை தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நினைவு மற்றும் அஞ்சலி தினமாக அனுசரிக்கிறது.
உலகம் முழுவதும் தீவிரவாதத் தாக்குதல்களின் காரணமாக தாக்கப்பட்ட, காயம் அடைந்த, அதிர்ச்சியடைந்த (அ) உயிரிழந்த நபர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வேண்டி இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
இந்த தினமானது 2017 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் நிர்ணயிக்கப் பட்டது.
இது முதன்முதலாக 2018 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “இணைப்புகள்” (Connections) என்பது ஆகும்.