TNPSC Thervupettagam

தீவுகள் மேம்பாட்டு ஆணையத்தின் ஆறாவது கூட்டம்

January 14 , 2020 1998 days 646 0
  • புது தில்லியில் நடத்தப்பட்ட தீவுகள் மேம்பாட்டு ஆணையத்தின் ஆறாவது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் தலைமை தாங்கினார்.
  • இந்தச் சந்திப்பானது "புதிய உச்சத்தை எட்டுவதற்காக தீவுகளில் பசுமை மேம்பாடு" என்பதின் மீது கவனத்தைச் செலுத்தியது.
  • தீவுகளின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக தீவுகள் மேம்பாட்டு ஆணையமானது (Island Development Agency - IDA) அறிவியல் பூர்வமாக மதிப்பிடப்பட்ட நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை நிர்ணயித்துள்ளது.
  • அந்தமான் நிக்கோபர் தீவுக் கூட்டங்களில் உள்ள நான்கு தீவுகளிலும் லட்சத்தீவுக் கூட்டங்களில் உள்ள ஐந்து தீவுகளிலும் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட இருக்கின்றது.
  • இந்தத் திட்டத்தின் இரண்டாம் நிலையில் அந்தமான் நிக்கோபர் தீவுக் கூட்டங்களில் உள்ள மேலும் 12 தீவுகள் மற்றும் லட்சத்தீவு தீவுக் கூட்டங்களில் உள்ள மேலும் 5 தீவுகள் ஆகியவை சேர்க்கப்பட இருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்