பாண்டவர்களால் கட்டமைக்கப்பட்ட துங்கநாத் ஆலயம் ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள ஐந்து பஞ்ச கேதார் ஆலயங்களில் துங்கநாத் ஆலயம் மிக உயரமானதாகும்.
பாண்டவர்கள் சிவனை வழிபடச் செய்வதற்காகவும், தங்கள் பாவங்களைப் போக்கச் செய்வதற்காகவும் என்று இந்த ஐந்து இடங்களிலும் ஆலயங்களைக் கட்டியதாக நம்பப் படுகிறது.