TNPSC Thervupettagam

துடிப்பான கிராமங்கள் திட்டத்துடன் பிரதமரின் கதி சக்தி ஒருங்கிணைப்பு

April 30 , 2023 831 days 349 0
  • சீன எல்லைப் பகுதியின் துடிப்பான கிராமங்கள் திட்டத்துடன் பிரதமரின் கதிசக்தி என்ற  மெகா திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டது.
  • உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் கிராமங்களை நோக்கி சுற்றுலாப் பயணிகளை வருகையை ஊக்குவித்தல் ஆகியவற்றை இந்தத்  துடிப்பான கிராமங்கள் திட்டம் (VVP) நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது (VVP) எல்லையோர மக்களின் குடிவெளியேற்றத்தைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது
  • கதி சக்தி மெகா திட்டத் தளத்தின் ஒரு பகுதியாக VVP இருக்கும்.
  • ஒருங்கிணைந்தத் திட்டமிடல் மற்றும் உள்கட்டமைப்பு இணைப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவதற்காக ரயில்வே மற்றும் சாலைகள் உட்பட 16 அமைச்சகங்களை கதி சக்தியின் டிஜிட்டல் தளமானது ஒன்றிணைக்கிறது.
  • பாரத்மாலா, சாகர்மாலா, உள்நாட்டு நீர்வழிகள், உலர்/நிலத் துறைமுகங்கள், உடான் போன்ற பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளின் உள்கட்டமைப்புத் திட்டங்களை இது ஒருங்கிணைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்