துணை இராணுவப் படைகளுக்கு முறைப்படுத்தப்பட்ட குரூப் A பணி அங்கீகாரம்
July 4 , 2019 2215 days 690 0
மத்திய ஆயுதப் காவல் படையின் மூத்த அதிகாரிகளுக்கு முறைப்படுத்தப்பட்ட குருப் A சேவைகள் (Organised Group A Service - OGAS) அங்கீகாரத்தை மத்திய அரசு வழங்கியது.
மத்திய அமைச்சரவையானது செயல்பாட்டில் அல்லாத நிதி மேம்பாடு (NFFU - Non-Functional Financial Upgradation) மற்றும் செயல்பாட்டில் அல்லாத தேர்வு நிலை (NFSG/Non-Functional Selection Grade) ஆகியவற்றின் பயன்களை நீடித்துள்ளது.
இது பின்வரும் 5 முதன்மையான மத்திய ஆயுதக் காவல் படைகள் அல்லது துணை இராணுவப் படைகளில் 2006 ஆம் ஆண்டிலிருந்துப் பணி ஓய்வு பெற்ற சில ஆயிரம் அதிகாரிகள் மற்றும் தற்போது பணியில் உள்ள 11,000 அதிகாரிகளுக்குப் பயனளிக்கும்.