துணைக் குடியரசுத் தலைவருக்கு “ஆர்டர் ஆஃப் கிரீன் கிரசெண்ட்” விருது
October 12 , 2019 2114 days 814 0
இந்தியத் துணைக் குடியரசுத் தலைவரான எம்.வெங்கையா நாயுடு ஆப்பிரிக்கத் தீவு தேசமான கொமொரோஸின் மிக உயர்ந்த குடிமக்கள் விருதான “ஆர்டர் ஆஃப் கிரீன் கிரசெண்ட்” என்ற விருதைப் பெற்றுள்ளார்.
இந்த விருதானது மோரோனியில் அந்நாட்டு அதிபரான அசாலி அசாமவுனியால் இவருக்கு வழங்கப்பட்டது.
மோரோனி நகரம் ஆனது ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள கொமொரோஸ் தீவுக் கூட்டத்தின் தலைநகரம் ஆகும்.
2017 ஆம் ஆண்டில் வெங்கையா நாயுடு துணைக் குடியரசுத் தலைவரான பிறகு இது அவருக்கு கிடைத்த இரண்டாவது சர்வதேச கௌரவமாகும்.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கோஸ்டாரிக்காவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி பல்கலைக் கழகமானது நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராக நிலையான வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக அவருக்கு ஒரு கௌரவ முனைவர் பட்டத்தை வழங்கியது.
இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் சியரா லியோன் மற்றும் கொமொரோஸின் அரசு முறை சுற்றுப் பயணத்தில் தற்போது உள்ளார்.