துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கரின் பதவி விலகல் என்பது, இடைக்கால காலியிடத்தைத் ஏற்படுத்தியுள்ளது என்பது, இது இந்திய வரலாற்றில் இதே போன்ற மூன்றாவது நிகழ்வாகும்.
முன்னதாக வி.வி. கிரி மற்றும் ஆர். வெங்கடராமன் ஆகியோர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவி விலகினர்.
அவர்களுக்குப் பிறகு முறையே கோபால் ஸ்வரூப் பதக் மற்றும் சங்கர் தயாள் சர்மா ஆகியோர் பதவியேற்றனர்.
அரசியலமைப்புச் சட்டமானது தற்காலிக துணைக் குடியரசுத் தலைவர் என்ற பதவியை ஏற்படுத்தப்படவில்லை.
இருப்பினும், துணைக் குடியரசுத் தலைவர் மாநிலங்களவையின் அதிகாரப் பூர்வத் தலைவராகவும் இருப்பதால், அவை துணைத் தலைவர் அவர் இல்லாத நேரத்தில் மாநிலங்களவைக்குத் தலைமை தாங்குவார்.
குடியரசுத் தலைவர் பதவியைப் பொறுத்தவரையில், அரசியலமைப்புச் சட்டம் ஆறு மாதங்களுக்குள் காலியிடத்தை நிரப்ப வேண்டும் என்று கோருகிறது.
ஆனால் துணைக் குடியரசுத் தலைவர் காலியிடத்திற்கு, அத்தகைய குறிப்பிட்ட காலக் கெடு எதுவும் இல்லை.
அப்பதவி காலியான பிறகு தேர்தல் "முடிந்தவரை விரைவில்" நடத்தப்பட வேண்டும் என்பதை மட்டுமே கூறுகிறது.
தேர்தல் ஆணையம் அதற்குரிய தேர்தல் தேதியை அறிவிக்கும்.
இந்தத் தேர்தல் 1952 ஆம் ஆண்டின் குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் சட்டத்தின் கீழ் நடத்தப்படுகிறது.
மரபுப் படி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஏதேனும் ஒரு பொதுச் செயலாளர் சுழற்சி முறையில் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர் தன்கரின் மீதமுள்ள பதவிக்காலம் மட்டுமல்லாமல், தான் பதவியேற்ற நாளிலிருந்து ஒரு முழுமையான ஐந்து ஆண்டு காலத்திற்கும் பதவி வகிப்பார்.