துருவ அறிவியல் மற்றும் தாழ்வெப்ப மண்டலம் குறித்த ஆராய்ச்சித் திட்டம்
March 28 , 2022 1239 days 559 0
துருவ மற்றும் கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையமானது துருவ அறிவியல் மற்றும் தாழ்வெப்ப மண்டலம் ஆராய்ச்சி (PACER - Polar Science and Cryosphere Research) திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தில் இந்திய ஆர்க்டிக் திட்டம், அண்டார்டிக் திட்டம், தாழ் வெப்ப மண்டலம் மற்றும் காலநிலைத் திட்டம் மற்றும் தெற்கு பெருங்கடல் திட்டம் ஆகியவை அடங்கும்.
துருவ மற்றும் கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் என்பது புவி அறிவியல்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும்.