துறைமுகங்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க சரக்கு கையாளுதல்
April 8 , 2026 150 days 198 0
இந்தியாவின் முக்கிய துறைமுகங்களானது 2025–26 ஆம் நிதியாண்டில் 904 மில்லியன் டன் என்ற இலக்கை விட அதிகம் மற்றும் 7.06% வளர்ச்சியைப் பெற்றுள்ள சாதனை அளவான 915.17 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளன.
சிறப்பாகச் செயல்பட்ட துறைமுகங்களில் தீன்தயாள் துறைமுக ஆணையம் (160.11 MT), பாரதீப் துறைமுக ஆணையம் (156.45 MT) மற்றும் ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் (102.01 MT) ஆகியவை அடங்கும்.
மோர்முகாவ் துறைமுக ஆணையம் மற்றும் கொல்கத்தா கப்பல்துறை அமைப்பு ஆகியவற்றில் அதிவேக வளர்ச்சி காணப்பட்டது.
சிறந்த உள்கட்டமைப்பு, மேம்படுத்தப்பட்ட இணைப்பு, டிஜிட்டல் அமைப்புகள் மற்றும் கப்பல் சென்று திரும்பும் சராசரி நேரம் ஆகியவை இந்த வளர்ச்சிக்குக் காரணங்கள் ஆகும்.
இந்தியா 12 முக்கிய துறைமுகங்களைக் கொண்டுள்ளது, இவை வளர்ந்து வரும் உலகளாவிய வர்த்தகத்திற்குப் பெரும் ஆதரவாக உள்ளன.