துறைமுகங்களுக்கான புதிய ஒருங்கிணைந்தப் பாதுகாப்பு மாதிரி
November 26 , 2025 15 hrs 0 min 17 0
இந்தியாவில் உள்ள 250க்கும் மேற்பட்ட துறைமுகங்களுக்கான பாதுகாப்பு ஒழுங்கு முறை ஆணையமாக மத்தியத் தொழில்துறைப் பாதுகாப்புப் படையை (CISF) மத்திய அரசு நியமித்துள்ளது.
ஒரு "இறையாண்மை நிறுவனம்" ஆனது அனைத்து துறைமுகங்களையும் ஒரே மாதிரியான பாதுகாப்பு அமைப்பின் கீழ் கொண்டு வந்து, தற்போது தனியார் சரக்கு கையாளும் துறைமுகங்களில் பாதுகாப்பை நிர்வகிக்கும்.
குறைந்தபட்சம் 80 முக்கிய EXIM துறைமுகங்கள் ஆரம்பத்தில் அணுகல் கட்டுப்பாடு, சரக்கு சோதனை மற்றும் கடல் பரப்பு ரோந்துக்காக CISF பிரிவினால் கட்டுப்படுத்தப் படும்.
CISF ஆனது, ஏற்கனவே 13 முக்கியத் துறைமுகங்களைப் பாதுகாத்து வருகிறது, ஆனால் இன்னும் பல துறைமுகங்கள் தற்போது ஒருங்கிணைந்தப் பாதுகாப்பு அமைப்புகள் இல்லாமல் தனியார் நிறுவனங்கள் அல்லது உள்ளூர் காவல்துறையை சார்ந்துள்ளன.
இந்த நடவடிக்கை உள்துறை அமைச்சகம் (MHA) மற்றும் ISPS (சர்வதேசக் கப்பல் மற்றும் துறைமுக மைய பாதுகாப்பு) விதிகளின் கீழ் CISF பிரிவினை அங்கீகரிக்கப் பட்ட பாதுகாப்பு அமைப்பாக (RSO) நியமிக்கப்பட்டதன் மூலம் வழங்கப் பட்ட வழி காட்டுதல்களைப் பின்பற்றுகிறது.