கப்பல்கள் மற்றும் துறைமுக வசதிகளின் பாதுகாப்பை மேற்பார்வையிடுவதற்காக துறைமுகப் பாதுகாப்பு வாரியம் (BoPS) உருவாக்கப்பட உள்ளது.
இணையவெளிப் பாதுகாப்பு மற்றும் துறைமுகத் தகவல் தொழில்நுட்ப உள் கட்டமைப்பை மையமாகக் கொண்டு, பாதுகாப்பு தொடர்பான தகவல்களை BoPS சேகரித்து, பகுப்பாய்வு செய்து, பரிமாறிக் கொள்ளும்.
2025 ஆம் ஆண்டு வணிகக் கப்பல் போக்குவரத்துச் சட்டத்தின் 13வது பிரிவின் கீழ் BoPS ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக இருக்கும்.
இது துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் (MoPSW) கீழ் செயல்படும்.
கப்பல்கள் மற்றும் துறைமுக வசதிகளின் பாதுகாப்பிற்கான ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை செயல்பாடுகளை BoPS மேற்கொள்ளும்.