துல்லிய காலத் தரவு மாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பு நெறிமுறைக் கூட்டுறவு
April 8 , 2024 581 days 351 0
துல்லிய காலத் தரவு மாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பு நெறிமுறை நுட்பத்தினைத் தொழில் துறையில் ஏற்றுக் கொள்வதை ஊக்குவிப்பதற்காக துல்லிய காலத் தரவு மாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பு நெறிமுறைக் கூட்டுறவினை (WRC) ஐரோப்பிய அணு ஆராய்ச்சி அமைப்பு (CERN) அறிமுகப்படுத்தியுள்ளது.
துல்லிய காலத் தரவு மாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பு நெறிமுறைக் கூட்டுறவானது (WRC) பிரத்தியேக ஆதரவு, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) ஆகிய திட்டங்களை வழங்குகிறது.
WRC தொழில்நுட்பமானது, லார்ஜ் ஹாட்ரான் கொலைடரில் (Large Hadron Collider - LHC) உள்ள முடுக்கத் தொடர்களின் நானோ விநாடிக்கும் குறைவான துல்லியத்தன்மை மற்றும் பிக்கோசெகண்ட் அளவிலான துல்லியமான ஒத்திசைவு ஆகியவற்றை வழங்குகிறது.