TNPSC Thervupettagam

துல்லியமாகத் தாக்கும் எறிகணை

March 12 , 2026 6 days 69 0
  • ஈரானுடன் தொடர்புடைய மேற்கு ஆசிய மோதல்களின் போது அமெரிக்க இராணுவத்தால் PrSM (துல்லியமாகத் தாக்கும் எறிகணை) எறிகணை பயன்படுத்தப் பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • PrSM என்பது நீண்ட தூரம் பாயும், நிலப்பரப்பிலிருந்து நிலப்பரப்பில் உள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் எறிகணையாகும்.
  • இது அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்படும் ATACMS (இராணுவத்திற்கான திட்டமிடப்பட்ட எறிகணை அமைப்பு) அமைப்பிற்கு மாற்றாக வடிவமைக்கப் பட்டு உள்ளது.
  • இந்த எறிகணை சுமார் 60 கி.மீ முதல் 499 கி.மீ-க்கும் அதிகமான தொலைவில் உள்ள இலக்குகளை மிகத் துல்லியமாகத் தாக்கும் வல்லமை கொண்டது.
  • இதனை MLRS (பல்முனை ஏவுகணை ஏவுதள அமைப்பு) மற்றும் HIMARS (அதிவேக இயங்குதிறன் கொண்ட பீரங்கி ஏவுகணை அமைப்பு) ஆகிய ஏவுதளங்களில் இருந்து ஏவ முடியும்.
  • இது எதிரியின் வான் பாதுகாப்பு அமைப்புகள், கட்டளை மையங்கள் மற்றும் தளவாட முகாம்களைத் தாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்