தூக்கிலிடப்படும் முதல் பெண்
February 23 , 2021
1606 days
716
- சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக ஒரு பெண் தனது குடும்பத்தில் ஏழு பேரைக் கொன்றதாக குற்றம் சாட்டப் பட்டு தண்டிக்கப் பட்டுள்ளார்.
- இதை அனைத்து நீதிமன்றங்களும் விசாரித்து மரண தண்டனை விதித்தன.
- இந்தப் பெண் மதுரா சிறையில் தூக்கிலிடப்படுவார்.
- ஒரு பெண் குற்றவாளியைத் தூக்கிலிடுவதற்கு ஏற்ற வகையில் அனைத்து வசதிகளும் பொருந்திய ஒரே இந்தியச் சிறை மதுரா சிறை ஆகும் .
- இந்தப் பெண்கள் தூக்கு மேடையானது கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக மதுரா சிறையில் கட்டப்பட்டது.
- ஆனால் சுதந்திரத்திற்குப் பின்னர் எந்தப் பெண்ணும் அங்கு தூக்கிலிடப்படவில்லை.
- லக்னோவைச் சேர்ந்த ராம்ஸ்ரீ என்ற பெண்ணுக்கு 1998 ஏப்ரல் 6 ஆம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.
- ஆனால் அவரது மரண தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
Post Views:
716