தூத்துக்குடி முத்து உற்பத்தியாளர்கள் சங்கம் ஆனது புவி சார் குறியீட்டினைப் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளது.
தூத்துக்குடி முத்துக்கள் ஆனது 2,000 ஆண்டுகளுக்கும் மேலான பதிவு செய்யப்பட்ட வரலாறு கொண்ட, மன்னார் வளைகுடாவில் இயற்கையாகப் பெறப்படும் முத்துக்கள் ஆகும்.
தூத்துக்குடியில் முத்து குளித்தல் நீண்ட காலமாக நடைபெற்று வருவதால், இது "முத்துக்களின் நகரம்" என்று அழைக்கப்படுகிறது.
இந்த முத்துக்கள் இயற்கையாகவே உருவாகி வட்ட, அரை வட்ட மற்றும் பொத்தான் வடிவ வடிவங்களில் காணப்படுகின்றன.
முத்துக்கள் மென்மையான மேற்பரப்புகள், நேர்த்தியான அமைப்பு மற்றும் வெள்ளை, பாலேடு, வெளிர் மஞ்சள், இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளி நிற வெள்ளை போன்ற வண்ணங்களைக் கொண்டுள்ளன.
தூத்துக்குடி முத்துக்கள் அவற்றின் பிரகாசமான பளபளப்புக்குப் பெயர் பெற்றவை என்பதோடுஇது பெரும்பாலும் "பால் பளபளப்பு" என்று விவரிக்கப்படுகிறது.
தூத்துக்குடி முத்துக்கள் இந்திய, ரோமானிய, கிரேக்க, அரபு, மத்திய தரைக்கடல் மற்றும் கிழக்கு ஆசியச் சந்தைகளில் வர்த்தகம் செய்யப்பட்டன.
இன்றைய தூத்துக்குடிக்கு அருகிலுள்ள பண்டைய கொற்கை துறைமுகம் முத்து வர்த்தகத்தின் ஆரம்பகால மையமாக இருந்தது.
பட்டினப்பாலை மற்றும் மதுரைக்காஞ்சி போன்ற சங்க இலக்கியங்களில் கொற்கை குறிப்பிடப் பட்டுள்ளது.
காலனித்துவ காலத்தில், போர்த்துகீசியம், டச்சு, பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்கள் முத்து குளித்தல் நடைமுறையை கட்டுப்படுத்தி வரி விதித்தனர்.
காலனித்துவ அதிகாரிகள் தூத்துக்குடியில் சர்வதேச வணிகர்களை ஈர்த்த முத்து ஏலங்களை நடத்தினர்.
பரவர் சமூகத்தினர் பாரம்பரியமாக முத்து குளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தனர்.
பாண்டிய மற்றும் சோழப் பேரரசுகளின் செல்வ வளத்திற்கு முத்து வர்த்தகம் முக்கியப் பங்களித்தது.