TNPSC Thervupettagam

தூத்துக்குடியில் வணிகக் கப்பல் கட்டும் தளங்கள்

September 24 , 2025 3 days 43 0
  • தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை எந்தவித மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப் படாத இரண்டு இடத்தில் (பசுமைக் கள) வணிகக் கப்பல் கட்டும் தளங்களை நிறுவ தமிழ்நாடு 30,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளது.
  • இந்தத் திட்டங்கள் ஆனது நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உட்பட 55,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • தமிழ்நாடு மாநிலத் தொழில் துறை மேம்பாட்டுக் கழகம் (SIPCOT) மற்றும் V.O. சிதம்பரனார் துறைமுக ஆணையம் இடையே இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதைத் தொடர்ந்து இந்த முதலீடு மேற்கொள்ளப் படுகிறது.
  • கொச்சின் கப்பல் கட்டும் தளம் லிமிடெட் நிறுவனமானது, முதல் கட்டத்தில் 10,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை (4,000 நேரடி மற்றும் 6,000 மறைமுக) உருவாக்கும் ஒரு கப்பல் கட்டும் தளத்தை அமைக்க 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்யும்.
  • மேசகன் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனமானது மற்றொரு கப்பல் கட்டும் தளத்திற்கு 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்யும்.
  • கப்பல் கட்டும் தளங்கள் ஆனது கடல்சார் துறையை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் தேசிய உத்தியுடன் இணைந்து, கப்பல் கட்டுதல் மற்றும் பழுது பார்ப்பதில் கவனம் செலுத்தும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்