தூய்மைமிகு பிரதான இடம்- மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
October 2 , 2017 3000 days 1193 0
தூய்மைமிகு பிரதான இடம்- மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
தூய்மை இந்தியா மூன்றாவது ஆண்டிற்கான துவக்க நாளான அக்டோபர் 2 அன்று, தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் இந்தியாவின் சிறந்த தூய்மைமிகு பிரதான இடமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூய்மை பணிகளில் துரிதமான துப்புரவுச் செயல்முறைகளை (Swift Cleaning Process ) மேற்கொண்டதால் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தின் தூய்மையே சேவை (Swachhta Hi-Seva) தொடக்கத்தின் கீழ் தூய்மைமிகு பிரதான இடங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.
இது நாட்டிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஆன்மீக, கலாச்சார இடங்கள் மற்றும் பிரதான இடங்களில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தூய்மைப்படுத்துதல் முயற்சியாகும்.
இது மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், மற்றும் சுற்றுலா அமைச்சகம் போன்றவற்றின் ஒத்துழைப்போடு மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தால் இம்முன்னெடுப்பு ஒருங்கிணைக்கப்படுகிறது.