தூய்மையான ஆற்றலுக்கான சர்வதேச தினம் 2026 – ஜனவரி 26
January 31 , 2026 225 days 278 0
இது 2023 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் (UNGA) பிரகடனப்படுத்தப் பட்டது.
இந்த நாள், 2009 ஆம் ஆண்டில் சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை (IRENA) நிறுவப்பட்டதைக் குறிக்கிறது.
மக்களுக்கும் பூமிக்கும் நன்மை பயக்கும் வகையில், தூய்மையான ஆற்றலுக்கு ஒரு நியாயமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நடவடிக்கைகளைத் திரட்டுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
தூய்மையான ஆற்றலில் சூரிய ஆற்றல், காற்று ஆற்றல் மற்றும் நீர் மின்னாற்றல் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் அடங்குவதுடன் இவை பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன.