தூய்மையான நிலக்கரி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான தேசிய மையம்
September 18 , 2019 2129 days 812 0
பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் தூய்மையான நிலக்கரி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான தேசிய மையத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் திறந்து வைத்தார்.
குறிக்கோள்
தூய்மையான நிலக்கரி தொழில்நுட்பங்களின் வளர்ச்சி
உய்ய மிகைநிலை மின் உற்பத்தி தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல்.
நாட்டின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய தூய்மையான நிலக்கரி குறித்த இந்த ஆராய்ச்சியானது உதவியாக இருக்கும்.
இதுபற்றி
தூய்மையான நிலக்கரி தொழில்நுட்பம் என்பது நிலக்கரி எரிசக்தி உற்பத்தியின் எதிர்மறையான சுற்றுச்சூழல் தாக்கத்தைக் குறைக்கும் தொழில்நுட்பங்களின் தொகுப்பாகும்.