தூர்தர்ஷன் அலைவரிசைச் சேவையானது 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
தூர்தர்ஷன் ஆனது இந்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி பொதுச் சேவை ஒளிபரப்பாகும். இது இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திற்குச் சொந்தமானதாகும்.
இது 1959 ஆம் ஆண்டில் தில்லியில் நிறுவப்பட்டது. பின்னர் இது மும்பை மற்றும் பிற நகரங்களிலும் ஏற்படுத்தப்பட்டது.
1976 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று இது அகில இந்திய வானொலியில் இருந்து பிரிக்கப்பட்டு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் ஒரு புதிய துறையாக உருவெடுத்தது.
இதன் தலைமையகம் தில்லியில் உள்ளது. இதன் குறிக்கோள் “சத்யம் சிவம் சுந்தரம்” என்பதாகும்.